மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டபிள்யு.ஆர்.வரதராஜன் கடந்த மாதம் காணாமல் போய்விட்டார். பின்னர் அவரது பிணம் சென்னை போரூர் ரெட்டை ஏரியில் மீட்கப்பட்டது.
இந்த நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று புரளி வெளியானது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் இதுபற்றி உறுதியாக சொல்ல முடியும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
நேற்று மாலையில் டபிள்யு.ஆர்.வரதராஜனின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்தது. இதுபற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:- டபிள்யு.ஆர்.வரதராஜன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியதால்தான் அவர் இறந்துள்ளார் என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்துள்ளார். தடயஅறிவியல் சோதனையில் அவரது வயிற்றில் இருந்து எடுத்த உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மையுள்ள பொருள் எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டபிள்யு.ஆர்.வரதராஜன் கடந்த மாதம் காணாமல் போய்விட்டார். பின்னர் அவரது பிணம் சென்னை போரூர் ரெட்டை ஏரியில் மீட்கப்பட்டது.
இந்த நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று புரளி பரவியது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் இதுபற்றி உறுதியாக சொல்ல முடியும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
நேற்று மாலையில் டபிள்யு.ஆர்.வரதராஜனின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்தது. இதுபற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:- டபிள்யு.ஆர்.வரதராஜன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியதால்தான் அவர் இறந்துள்ளார் என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்துள்ளார். தடயஅறிவியல் சோதனையில் அவரது வயிற்றில் இருந்து எடுத்த உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மையுள்ள பொருள் எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|