நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா உல்லாச விடீயோ வெளியான பிறகு தலை மறைவான சாமியார் நித்யானந்தா இரு நாட்களுக்கு முன்பு விடீயோ மூலமாக தன்னிலை விளக்கத்தை இணைய தளத்திலும் வெளியிட்டு அவரது வழக்கறிஞர் மூலமாக பத்திரிக்கையாளர்களுக்கும் தெரிவித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து தலைமறைவான ரஞ்சிதாவும் பிரபல புலனாய்வு வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் நித்யானந்தாவுக்கு நான் எனது கடமையை செய்தேன். காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் தவறா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனக்கு நித்யானந்தா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரது கொள்கைகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் என்னை அதிகம் கவர்ந்தன. எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப் படுத்தியதால் அன்று முதல் அவரது ஆஸ்தான பக்தை ஆகி விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் பத்திரிகைகள் தான் எனக்கும் என் கணவருக்கும் பிரச்னை என்று எழுதுவதாகவும் தெரிவித்த ரஞ்சிதா நித்யானந்தா மகாஞானி அவர் அடுத்த சில நாட்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார் என்று கூறியுள்ளார் நடிகை ரஞ்சிதா.

எழுதியவர்: Arun, March 09, 2010
எழுதியவர்: sathish ace , March 09, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|




