இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அதிபர் ராஜபக்சாவை தோல்வி அடைய செய்ய இந்திய 'ரா' அதிகாரிகள் செயல்பட்டதாக இலங்கை குற்றச்சாற்று

E-mail அச்செடுக்க
நாடாளுமன்ற தேர்தலின்போது அதிபர் ராஜபக்சாவை தோல்வி அடைய செய்ய சில இந்திய அதிகாரிகள் செயல்பட்டதாக இலங்கை குற்றச்சாற்றியுள்ளது.
இந்தியாவின் 'ரா'வைச் சேர்ந்த சில அதிகாரிகள், நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, மகிந்த ராஜபக்ச தோல்வி அடைவதற்கு சில இந்திய அதிகாரிகள் செயல்பட்டதாக இலங்கை தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய அயலுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ்,அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசியபோது  நந்தன குணதிலக இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.ஆனால் நிருபமா இந்தக் குற்றச்சாற்றை மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொழும்பிலிருந்து வெளியாகும் " டெய்லி மிரர்" நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இலங்கை தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக கூறியுள்ளதாவது:
" முன்னர் அமெரிக்காவுடன் இலங்கை நல்லுறவை வளர்த்துவந்ததால், விடுதலைப்புலிகளை இந்தியா வளர்த்துவிட்டது.அதன் உளவு ஏஜென்சியான 'ரா' மற்ற போராளி குழுக்களை உருவாக்கியது.
இந்நிலையில் சமீபத்திய தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெறுவதை விரும்பாத சில இந்திய அதிகாரிகள், அவரை தோற்கடிக்க முயற்சித்தனர்.அதே சமயம் இந்திய அரசோ அல்லது பிரதமரோ இதை செய்யவோ அல்லது விரும்பவோ இல்லை" என்று அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாற்றை இந்தியா மறுத்துள்ளது.
கொழும்பில் இந்திய செய்தியாளர்களிடம் பேசிய நிருபமா ராவ், 'ரா' போன்ற இந்தியாவின் எந்த நிறுவனமும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக செயல்படவில்லை என தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல் எனவும், இந்தியா எந்த ஒருநாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
நுனிப்புல்