இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

30,000 மாணவர்கள் தோல்விக்கு அரசே காரணம்!

E-mail அச்செடுக்க
கடந்த ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு எழுதியவர்களில் 69 சதவீதம் பேரை, திட்டமிட்டே அரசு, தோல்வி அடையச் செய்துள்ளதாக புகார் கிளம்பியுள்ளது. 2008-2009 கல்வியாண்டிற்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு,2009 ஜூனில் நடந்தது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 120 மாணவ-மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வில் 50 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகள், கடந்த மாதம் பிப்ரவரி 27ம் தேதி வெளியானது. இதைப் பார்த்த மாணவர்களில் பெரும்பாலானோர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், சுமார் 30,000க்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறவில்லை. வெறும் 31 சதவீதம் பேர் மட்டுமே தேர்வடைந்துள்ளனர்.இது தமிழகம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி தேர்வை எழுதிய மாணவ,மாணவியரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலோர் பெயில் ஆக்கியுள்ளதால்,ஒரு வருடப் படிப்பு, பணவிரயம் மற்றும் பதிவு மூப்பும் பறிபோவதாக வேதனை தெரிவித்துள்ளனர் இதற்கு அரசுதான் காரணம் என்று இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கல்வியாண்டு துவங்கி ஐந்து மாதங்கள் கழித்தே பாடநூல் வழங்கப்பட்டனர். மேலும் புதிய பாடத்திட்டம்,கலைத் திட்டம் உருவாக்கப்பட்டு வினாத்தாள் அமைப்பும் மாற்றப்பட்டது என இதற்கான காரணங்களையும் இந்த அமைப்பு அடுக்குகிறது.

கடந்த ஆண்டில் 40 மதிப்பெண்ணுக்கு ஒரு மதிப்பெண் கேள்வியும், 60 மதிப்பெண்ணுக்கு தியரி பிரிவும் இடம் பெற்றிருந்தன. இவ்வாண்டில், முழுக்க முழுக்க தியரி முறையில் மட்டுமே கேள்விகள் இருந்ததாகவும் குறை கூறியுள்ளனர். தேர்வு முடிந்து கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வரை முடிவு வெளியிடாமல் இருந்தது குறித்தும் மாணவ, மாணவியர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பாக மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் மாணவ, மாணவியர் கூறியுள்ளனர்.

மேலும், கோவையைச் சேர்ந்த ஐந்து ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்