மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்களுக்கு அனுப்பியுள்ள தந்தியில் முதல்வர் கூறியிருப்பதாவது:நாடாளுமன்ற மேல் சபையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப் பட்டிருப்பது எனக்கு முற்றிலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதன்மூலம் இந்திய மகளிருக்கும் அதிகாரம் அளிப்பதில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் செழித்தோங்க புதிய வழி பிறந்துள்ளது.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து தந்தியில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




