கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணா அம்மானின் துரோகச்செயலே விடுதலைப்புலிகள் வீழ்ச்சிக்கு அடிகோலியது. விடுதலைப்புலிகளின் உட்கட்டமைப்பு குறித்த ரகசியங்களை இலங்கை ராணுவத்துக்குப் போட்டுக் கொடுத்ததற்குப் பிரதி பலனாய் ராஜ பக்சே அவரை அமைச்சராக்கினார். கடந்த மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பு அழித்தொழிக்கப்பட்ட பிறகு கருணாவின் தேவை ராஜபக்சேவுக்கு அவசியமில்லாதாகியது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு கிட்டத்த கைகழுவும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கருணா எப்படியாவது அரசின் கருணைப்பார்வையை தக்கவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன்படி,அமைதியாக வழிகளில் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை விரும்பும் முன்னாள் போராளிகளை தம்முடன் இணைந்து பணியாற்ற கருணா அழைப்பு விடுத்திருக்கிறார்.
கொழும்பில் நடந்த புலிகள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் "ஒவ்வொரு பயங்கரவாதக் குழுவிலும், என்னைப் போல் அமைதியான தீர்வை விரும்புபவர்களும் இருக்கத்தான் செய்வர்.அரசும்,அதிகாரிகளும் அந்த அமைதி விரும்பிகளை வரவேற்று அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் அரசுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பிரச்னைகளுக்கான தீர்வைக் காண வாய்ப்பளிக்க வேண்டும். இப்போது, தமிழர்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களது வறுமையைப் போக்கும் செயல்களில்தான் அரசின் கவனம் இருக்க வேண்டும். இவ்வாறு கருணா தெரிவித்தார்.
தற்போதைய ராஜபக்சே அரசில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சராக இருக்கும் கருணாவின் பேச்சுக்கு இணங்க அவருடன் இணையும் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு எத்தகைய உத்திரவாதங்கள் வழங்கப்படும் என்ற தகவல் இல்லை. ஏற்கனவே சரணடைந்த போராளிகளை தடுப்பு முகாம்களிலிருந்து பிரித்தெடுத்து தனித்தனியாகச் சித்ரவதை செய்து சுட்டுக்கொண்ட இலங்கை ராணுவத்தை நம்பி, மனம் திருந்தி திரும்பவரும் முன்னாள் புலிகள் நம்புவார்களா? கருணாவே அவசியமில்லை என்ற சூழலில் அவரால் அழைத்துவரப்படும் முன்னாள் சகாக்களுக்கு ராஜபக்சே அரசிடம் முக்கியத்துவம் கிடைக்குமா? என்ற ஐயங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்காதவரை கருணாவை வைத்து முன்னாள் புலிகளை அழைத்து வரச்செய்து தங்கள் தேவையை தீர்த்துக்கொள்ளும் சூழ்ச்சியாகவே தெரிகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




