தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதால் இலங்கை கவலையடைந்திருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் உடனான சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது, "விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் சில தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அரசு இது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.இந்திய அரசுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம்.
இலங்கை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்கும். இறைமையைக் காப்பாற்றுவதற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்போம் என்றார்.
ராணுவத்தால் கொல்லப்பட்டதாகச் சொல்லும் இலங்கை அரசு, பிரபாகரனை அவரின் ஆதரவாளர்கள் தேடுவதால் ஏன் கவலை கொள்ள வேண்டும்? பிரபாகரனின் மரணச் சான்றிதழை வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, தற்போது பிரபாகரனைத் தேடுவதால் கவலையடைந்திருப்பதாகச் சொல்வதால் அவரின் சாவு குறித்த குழப்பம் இலங்கை அரசிடமும் உள்ளதோ என்ற ஐயம் எழுகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




