பெண்கள் மசோதா நிறைவேற்றம் குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபோது கூட்டணிக் கட்சிகள் திரிணாமுலும், தி.மு.க.வும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பூரண ஆதரவு அளிப்பதாகவே கூறினர். எம்.பி.,க்களை அவை மார்ஷல்களை வைத்து வலுக்கட்டாயமாக வெளியயேற்றப்பட்டது ராஜ்யசபா தலைவரின் தனிப்பட்ட உரிமை.
ராஜிவ் கண்ட கனவான பெண்கள் மசோதா தற்போது ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ளது. இம்மசோதா,மக்காளவைக்கு எப்போது கொண்டு வரப்படும் என்பது பற்றி தற்போதைக்கு எதுவும் கருத்துக் கூற முடியாது. இதுகுறித்து ஆலோசனை செய்து உரிய முடிவு எடுக்கப்படும்.
பெண்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஆதரவை வாப வாங்கியிருப்பதால் மத்திய அரசுக்கு பெரியளவில் நெருக்கடி இல்லை. இதைவிட சோதனையான காலங்களை சந்தித்திருக்கிறோம். இம்மசோதா வெற்றி, பெண்கள் சமூகத்திற்கு கிடைத்த வெற்றி. ராஜிவ் கண்ட கனவு நனவாகியிருக்கிறது. நியாயப்படி லாலு இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். அவருக்கு ஏழு பெண்கள் உள்ளனர். அவர் வீட்டிலேயே அவர் மகள் ஏழு பேரும் இம்மசோதாவுக்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள் இவ்வாறு சோனியா கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




