அகதி முகாமில் பெண் தீக்குளிப்பு - காவல்துறை காரணமா?
தமிழகத்தில் பல இடங்களில் இலங்கையில் இருந்து வந்துள்ள மக்களுக்கென அகதி முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு அகதி முகாம் கரூர் அருகே உள்ள ராயனூர் என்ற இடத்தில் உள்ளது. இந்த முகாமில் உள்ள பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இப் பெண்மணியி்ன் கணவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர் காவல்துறையினரால் மானத் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. மேலும் காவல்துறையின் பயமுறுத்தல் காரணமாக இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிகிறது.
இக்குற்றச்சாட்டினை காவல்துறையினர் மறுத்துள்ளனர்
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




