இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஷார்ஜாவில் பயங்கரத் தீ! 2 கிடங்குகள் எரிந்து நாசம்

E-mail அச்செடுக்க

ஷார்ஜா: இன்று புதன்கிழமையன்று ஷார்ஜா இண்டஸ்டிரியல் ஏரியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தில் இரண்டு வேர் அவுஸ்கள் முற்றிலும் தீக்கிரையானது மற்றும் தொழிலாளர்கள் பலர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.

இன்று காலை 11 மணியளவில் மொவைலா கேம்ப் அருகே உள்ள 13 வது இண்டஸ்டிரியல் ஏரியா பகுதியில் திடீரென தீப்பிடித்தது என ஷார்ஜா சிவில் பாதுகாப்பு துறை நிர்வாக இயக்குனர் கர்னல் வலீத் அல் செர்கல் தெரிவித்தார் மேலும் தீக்கிரையான இரண்டு வேர் அவுஸ்களிலும் தீப்பற்றக்கூடிய பெயிண்ட் ஸ்பான்ச் போன்ற பொருட்களும் மரத்தினாலான கார்ட்போர்ட் போன்ற பொருட்களும் இருந்ததாக கூறினார் இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது மேலும் சேதமடைந்த மற்றும் தீக்கிரையான பொருட்களின் மதிப்பு பெரிய அளவில் இருக்கும் ஆனால் இன்னும் அவை கணக்கிடபடவில்லை என்றும் கூறினார்.

எரிந்து சாம்பலான இரு கிடங்குகளும் ஓவர்ஸீஸ் கம்பெனி மற்றும் அல் பதியா கம்பெனிகளின் கிடங்குகளாகும் தியை அணைக்க சுமார் இரண்டு மணிக்கும் அதிகமான நேரம் பிடித்தது மேலும் தீ விரந்து அணைக்கப்பட்டதால் இக்கிடங்குகளுக்கு அருகிலுள்ள மற்ற 24 கிடங்குகள் லேசான பாதிப்புக்கு மட்டுமே உள்ளானது என்று அல் செர்கல் கூறினார். துபை மற்றும் அஜ்மானில் உள்ள தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணத்து ஏற்படவிருந்த பெரும் சேதத்தை தவிர்த்தனர். தீயினால் காயமடைந்தவர்களை தவிர உயிரிழப்பு எதுவும் இதுவரையில் இல்லை
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்