தென்னிந்திய மாநிலங்களில் இருந்து வலைப்பதியும் வலைப்பதிவர்களுக்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க இந்திய உறவு குறித்து போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.அமெரிக்கத் தூதரக பொது விவாகரத்துறை அதிகாரியான ரஜினி குப்தா இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தையும், இணையம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.
18 வயதைப் பூர்த்தியடைந்து அனைத்து இந்தியர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். ஏப்ரல் 9ஆம் தேதிக்கு முன் போட்டியாளர்கள் தங்கள் பதிவை அளிக்க வேண்டும்.
இப்போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு மடிக்கணினியும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு கணினியும், மூன்றாம் இடம் பெறுபவருக்கு ஐபோடும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியார்கள் தங்கள் சொந்த விவரங்களுடன் தங்கள் வலைப்பூ முகவரியையும் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் போட்டி தொடர்பான நிபந்தனைகள் அமெரிக்கத் தூதரகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.facebook.com/chennai.usconsulate?v=app_4949752878#!/chennai.usconsulate?v=app_10442206389
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




