பள்ளிப்பாளையம் அருகேயுள்ள அக்ரகாரம் பகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்த வேலுச்சாமிக்கு (35) கொலை மிரட்டல் வந்ததையடுத்து நேற்றிரவு தனது தம்பியுடன் பள்ளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார்.
போலீஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வெட்டிக் கொன்றது. 16 இடங்களில் வெட்டுப்பட்ட வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளிப்பாளையம் பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஊர்வலமும் நடைபெறுகிறது. இந்த கொலை சம்பவத்தால் பள்ளிபாளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




