இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

திருமங்கலம் பள்ளி வேன் கவிழ்ந்து 15 குழந்தைகள் காயம்

E-mail அச்செடுக்க

மதுரை: திருமங்கலம் அருகே பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் அதில் இருந்த 15 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

மதுரை திருமங்கலம் அல் அமீன் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று இன்று காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்தபோது, அரசப்பட்டி அருகே சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதிலிருந்த 15 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். உடனே அருகிலிருந்தவர்கள் காயடைந்த குழந்தைகள் அனைவரையும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டள்ளனர். வேனை ஓட்டிவந்த டிரைவரும் படுகாயம் அடைந்துள்ளார்.

இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்