இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பென்னாகரம் தேர்தலுக்குப் பிறகு மின்கட்டணம் உயர்த்தப்படும்

E-mail அச்செடுக்க

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போதுள்ள மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளது.

அதன்படி உயரழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு - ரூ.4; கல்வி நிறுவனங்கள் - ரூ.4.20; வணிக நிறுவனங்கள்- ரூ.5.80; தாழ்வழுத்தம் வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கு மேல் - ரூ.4;400 யூனிட்டுகளுக்கு மேல் - ரூ.4.25;600 யூனிட்டுகளுக்கு மேல் - ரூ.5.75, சினிமா தியேட்டர்கள்- ரூ.5; தனியார் கல்லூரிகள் - ரூ.6.

தமிழ்நாடு மின்வாரியத்தின் மாநில ஆலோசனைக்குழு கூட்டம் இன்று (வியாழன்) கூடுகிறது. அடுத்த கட்ட ஆலோசனை நடவடிக்கையாக மின்கட்டண உத்தேசத்திட்டத்தின் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமிருந்தும் கருத்துக்களையும் மறுப்புரைகளையும் கேட்பதற்கு பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது.

மார்ச் 30-ந் தேதி சென்னையிலும், ஏப்ரல் மாதம் 8-ந் தேதி மதுரையிலும், ஏப்ரல் 13-ந் தேதி கோயம்புத்தூரிலும், ஏப்ரல் 15-ந் தேதி திருச்சியிலும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.விரைவில் பென்னாகரம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அதன் பாதிப்பு தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்டண உயர்வுகள் அறிவிக்கப்படலாம்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்