இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மகளிர் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டையும் உடனே வழங்க வேண்டும் - திருமாவளவன் வேண்டுகோள்

E-mail அச்செடுக்க
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகப்பூர்வமானதாகும். ஆனால், 33 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமே அளிப்பது என்ற முடிவு மகளிருக்கான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக அமையாது.
அத்துடன் அவ்வாறு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவில்லையென்பதும் ஜனநாயக விரோதப்போக்கேயாகும். ஆட்சியாளர்கள் அன்றும் இன்றும் உள்ஒதுக்கீட்டை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
இம்மசோதா முழுமையான மனநிறைவை அளிக்கவில்லையென்றாலும், பெண்கள் இடஒதுக்கீடு எனும் சமூகநீதி, சட்டப்படி உரிமையாகப் பரிணாமம் பெற்றுள்ளது என்னும் அளவில் சற்று ஆறுதல் அளிக்கிறது. முதலில் `பொதுவான உரிமை'யை மீட்டு பின்னர் `குறிப்பான உரிமை'யை வென்றெடுப்போம் என்னும் வகையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம்.
`இட ஒதுக்கீடு இப்போதே வேண்டும், உள் ஒதுக்கீடு உடனே வேண்டும்'. உள்ஒதுக்கீடு என்னும் உரிமைக்காகத் தொடர்ந்துபோராடுவதுதான் இப்போதைக்கு நாம் கையாள வேண்டிய அணுகுமுறையாக உள்ளது.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிய காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். மகளிருக்கான இடஒதுக்கீடு அனைத்திலும் 50 சதவீதம் எனும் அளவில் வென்றெடுப்பதையும், உள்ஒதுக்கீட்டை வென்றெடுப்பதையும் நமது அடுத்த சவாலாக ஏற்றுச் செயல்படுவோமென உறுதியேற்போம்" என்று கூறியுள்ளார்.
வி டுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
நுனிப்புல்