சென்னை: மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் ஆகியவை தாக்கப்பட்ட வழக்கில் பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 100 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உ.ரா.வரதராஜன் மரணம் தொடர்பாக மக்கள் தொலைக்காட்சி சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது சிலர் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தைத் தாக்கினர். இதன் எதிரொலியாக, தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டது. இதுதொடர்பாக, பா.ம.க.வைச் சேர்ந்த 14 பேரும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 85 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி சென்னையிலுள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அத்துடன் சென்னை மாநகராட்சி பா.ம.க. கவுன்சிலர் பிரகாஷ் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




