சென்னை: நடிகையுடன் உல்லாசமாக இருந்த போலிச் சாமியார் நித்யானந்தாவின் சீடர்களில் ஒருவரான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் என்ற ஸ்ரீ நித்யா சரவணானந்தா முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், "நான் கடந்த 1983-ம் ஆண்டு முதல் ஹோமியோபதி டாக்டராக பணியாற்றி வருகிறேன். சாலை விபத்து காரணமாக 14 ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்தேன். எனது நண்பரின் அறிவுறுத்தலால், சுவாமி நித்யானந்தாவை சந்தித்து ஆசி பெற்றேன். அவரிடம் ஆசி பெற்ற பிறகு நான் பூரண குணமடைந்தேன். அதன்பிறகு, அவரிடம் சீடராக சேர்ந்து எனது பெயரையும் ஸ்ரீ நித்யா சரவணானந்தா என்று மாற்றிக் கொண்டேன். என்னிடம் வரும் நோயாளிகளுக்கு யோகா பயிற்சிகளையும், ஆன்மிக அறிவுரைகளையும் சிகிச்சையாக வழங்கி வந்தேன்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




