சென்னை: ரஞ்சிதாவுடனான படுக்கையறை வீடியோ காட்சிகளுக்குப் பிறகு பக்தர்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து தலைமறைவான சாமியார் நித்தியானந்தா தற்போது கும்பமேளாவில் கலந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், உ.பியில் கும்பமேளாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் அமெரிக்க பக்தர் ராஜீவ் மல்ஹோத்ராவுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் நித்தியானந்தா கூறியிருப்பதாவது
பெங்களூருவிலுள்ள தியான பீட ஆசிரம இடம், பிரபல சஜ்ஜன் ராவ் குடும்ப வாரிசுகளான வினாயக் ராவ், பிரதாப் ராவ், ஜீவன் ராவ் ஆகியோரால் எனக்கு தானமாக வழங்கப்பட்டது. இச்சகோதரர்கள் என் மீது அன்பு கொண்டவர்கள், எனது போதனைகளால் பலன் பெற்றவர்கள், இறை பக்தி நிரம்பியவர்கள். என் மீது கொண்ட அன்பாலும்,எனது இறைப்பணிக்காகவும் எனக்கு நிலத்தைத் தானமாகக் கொடுத்தனர்.
2003ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பகுதியையும்,பின்னர் இன்னொரு பகுதியையும் தானமாக அளித்தனர். அங்கு எனது இறை மையத்தையும், இறைப் பணியையும் மேற்கொள்ள தானமாக அளித்தனர். அங்குள்ள மிகப் பழமையான ஆலமரம் மற்றும் சிவன் கோவிலை அவர்கள் நீண்ட காலமாக வழிபட்டு வணங்கி வந்தனர். அவற்றையும்கூட எனக்கே அளித்தனர்.இவை அனைத்தும் முறைப்படி, சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. அனைவரும் அறியும் வகையில் அதை இணையதளத்தில் விரைவில் வெளியிடுவோம்.
கனடாவை சேர்ந்த சீடர் எங்கள் ஆசிரமத்தில் தங்கியிருந்து போதனைகளைக் கேட்டு வந்தார். அவர் எப்போதும் மாடி சுற்றுச் சுவரில் காலை கீழே தொங்க விட்டபடிதான் அமர்ந்திருப்பார். இதையும் பலரும் பார்த்துள்ளனர். ஆனால் அப்படி அமரக் கூடாது என்று ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் அவரை பலமுறை எச்சரித்திருந்தும் ஒருநாள் அப்படி அவர் அமர்ந்திருந்தபோது கீழே விழுந்து விட்டார்.
இதைப் பார்த்த அனைவரும் விரைந்து வந்து அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கொண்டு வரப்பட்டபோதே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையும் உரிய முறையில் தகவல் தெரிவித்தோம். அவர்களும் விசாரித்தனர்.
பின்னர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் குடும்ப நண்பரை கனடாவிலிருந்து அனுப்பி இங்கேய இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டதன்பேரில் பெங்களூரில் இறுதிச் சடங்குகள் நடந்தன. இந்து முறைப்படி இறுதிக் காரியங்களையும் நாங்களே செய்தோம். அனைத்துமே சட்டப்பூர்வமாகச் செய்யப்பட்டது. போலீஸார் விசாரணையிலும் பிரேதப் பரிசோதனையிலும் குற்றச் செயல் எதுவும் இல்லை என்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அப்போதே பத்திரிகைகளுக்கும் அனைத்துத் தகவல்களையும் தெரிவித்தோம். இதுகுறித்த ஆவணங்களையும்கூட இணையதளத்தில் வெளியிட தயாராக இருக்கிறோம். பொதுமக்களே இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.
தமிழக ஆசிரமத்தில் பெண் கற்பழிக்கப்பட்டதாகச் சொல்வதும் முற்றிலும் பொய். யாரும் இப்படியொரு புகாரை இதுவரை சொன்னதில்லை. தேவையில்லாமல் கதைகளைப் புனைந்து, திரும்பத் திரும்ப அதைத் தெரிவித்து, ஆசிரமத்தின் பெயரைக் கெடுக்கிறார்கள். மீண்டும் மீண்டும் இதுபோன்ற அவதூறான மீடியாக்கள் புகார்களைப் பரப்புவது துரதிர்ஷ்டவசமானது.
பிடுதி ஆசிரமம் அமைந்துள்ள இடத்தில் ஏராளமான சந்தன மரங்கள் இயற்கையாகவே வளர்ந்துள்ளன.அங்கு வந்த திருடர்கள், சந்தன மரங்களை வெட்டி முக்கியப் பகுதிகளை எடுத்துச் சென்றதோடு சிலவற்றை அங்குள்ள கோவில் பகுதியில் போட்டு விட்டுச் சென்று விட்டனர். இதுகுறித்து நாங்கள் முன்பே வனத்துறைக்கு எங்களது பி.ஆர்.ஓ. மூலம் புகார் கொடுத்தோம். போலீஸிலும் புகார் கொடுத்தோம். வனத்துறையினர் இதுகுறித்து எங்களிடம் கூறுகையில், இது பெரிய பிரச்சினையில்லை, கவலைப்படாதீர்கள் என்று தெரிவித்தனர்.திருடர்கள் விட்டுச் சென்ற சந்தனக் கட்டைகளே ஆசிரம வளாகத்தில் கிடைத்துள்ளன மற்றபடி, பதுக்கல் எதுவும் நடக்கவில்லை.
சட்டப்பூர்வமாக, முறைப்படி பதிவு செய்யப்பட்ட தியான பீடத்தின் ஆடிட்டர் மனோஜ் செளத்ரிதான். அவர் இந்திய ஆடிட்டர்கள் சங்கத் தலைவராக 2 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தவர். இங்குள்ள அனைத்தும் முறையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. வருமான வரித்துறைக்கு முறைப்படி கணக்குகளை சமர்ப்பித்து வருகிறோம்.
ஆசிரமத்தில் இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவது முற்றிலும் பொய். இங்குள்ள அனைவருமே சுய விருப்பத்துடனேயே இறைப்பணிக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு தங்கியுள்ளனர். யாரும் விருப்பத்திற்கு மாறாக இங்கு இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. விருப்பம் இல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கிருந்து வெளியேறலாம். அதில் எந்தத் தடையும் இல்லை.
இங்குசேர விரும்பி வருபவர்களிடம் முறைப்படி விசாரணை நடத்தி,அவர்களின் பூரண விருப்பம் இருந்தால் மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். அத்தோடு ம்ட்டுமின்றி அவர்களின் பெற்றோரின் ஒப்புதலையும் பெற்ற பிறகே அனுமதிக்கிறோம்.அனைவரும் கையெழுத்திட்டு விருப்பத்தை முறைப்படி தெரிவித்து விட்டுத்தான் தங்கியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் இங்கிருந்து வெளியேற முடியும். இது ஒளிவுமறைவில்லாத ஒரு ஆசிரமம். இங்கு எந்த ரகசியமும் இல்லை.
ஏன் மீடியாக்களில் எங்களைப் பற்றி இப்படி தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை. இதன் பின்னணியில் யார் உள்ளனர் எனபதும் தெரியவில்லை. எதுவும் தெரியாமல் நாங்கள் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எதைச் சொல்வதாக இருந்தாலும் உரிய ஆதாரத்துடன் சொல்ல வேண்டும் என்பதால் நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.
இந்தப் பேட்டியின்போது ரஞ்சிதா குறித்து ராஜீவ் மல்ஹோத்ரா எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. அதேபோல அதுகுறித்து நித்தியானந்தாவும் அதுகுறித்து எதுவும் விளக்கவில்லை. நெருப்பில்லாமல் புகையாது என்பது உண்மையாகாமலிருந்தால் சரி!

எழுதியவர்: suresh, March 12, 2010
எழுதியவர்: suresh, March 12, 2010
எழுதியவர்: vivekjayan, March 17, 2010
enakkum ellathaiyum therinchukka asai undunnu, property la villangam illama irukkalam, ana nee ambani avaradhakku nanga than ilichavaya, sollu kalai pudika 25000
kaiyai pudica oru lacham nnu what is this non sense, ranjitha kku villangam irukke, nee brammacharinnu sollittu oorai emathiirukka, ippo pavama munchiyai vachikittu araichi panren nkara, seri sollu,
innum ennellam sollamudiyumo sollu,
ippo kumbamela la enna nadakudu araichithane unmaiya sollu , dont spoil north girls
nee ulagalthula fulla ashram vachu ellaraiyum araichi pannitta unakku north girls nu pavama pakkapora sollu
| < முந்தையது | அடுத்தது > |
|---|




