சென்னை: மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இந்திய முஸ்லிம் லீக்கின் 62ம் ஆண்டு சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் பேசும்போது மகளிர் மசோதா நிறைவேற வேண்டிய நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தை தவிர்த்துவிட்டு, முஸ்லிம் லீக் மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் வந்தேன் என்று தெரிவித்தார்.
மாநாட்டில் மத்திய மு.க.அழகிரி கலந்துகொண்டு பேசுகையில், 'இந்த மாநாட்டிற்கு வரவேண்டும் என என்னை டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் 185 ஓட்டுகளில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே நான் மாநாட்டிற்கு வருவதற்காக விமான நிலையத்துக்கு புறப்பட்டேன். நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதால் நீங்கள் டெல்லியிலேயே இருக்க வேண்டும் என சகோதரி கனிமொழி என்னை போனில் தொடர்பு கொண்டு கூறினார். நான் மாநாடுக்கு வருவதாக வாக்குறுதி அளித்துவிட்டேன். என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகக் கூடாது என கூறிவிட்டு வந்து விட்டேன் என்றார்.
மேலும், எனக்கு பதவியை பற்றி கவலையில்லை. மக்கள் என்மீது வைத்துள்ள அன்பு தான் பெரியது. இஸ்லாமிய சமுதாய மக்கள் என் மீதும், தலைவர் மீதும் வைத்துள்ள அன்பு 100 வயது வரை முதல்வரை பதவியில தொடரச் செய்யும்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




