சென்னை: சுவாமி நித்யானந்தா விவகாரத்தில் சில பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நடந்து கொள்ளும் விதம் ஆரோக்கியமற்றது. ஒருவர் மீதுள்ள குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகாத வரையில் அவர் குற்றமற்றவர் என்று நினைப்பதுதான் மரபும், பண்பாடும் ஆகும்.
சுவாமி நித்யானந்தா தன்நிலை விளக்கமளிக்க அவருக்குப் போதிய கால அவகாசமும் வழங்கப்பட வேண்டும். அவருடைய பக்தர்களையும், சீடர்களையும் காவல்துறை தேடுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி மற்றவர்களை மிரட்டுவதாக அமைகிறது. இதற்காக 'சாமியார், சாமியார்' என்று சொல்லி ஒட்டு மொத்த துறவிகள் சமுதாயத்தையே ஏளனம் செய்து கொச்சைப்படுத்துவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுவரை எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்படி நித்தியானந்தா குற்றமற்றவர் என்றே நம்புகிறோம். ஆசிரமத்துக்குச் சொத்து இருப்பது பாவமல்ல. அந்த சொத்து தவறான முறையில் சேர்க்கப்பட்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம். வழக்கு தொடுப்பதன் மூலம் அது குறித்து விசாரிக்க முடியும்.
வருமான வரித்துறையினர் இது குறித்து ஆய்வு நடத்த முடியும். இதை எல்லாம் விட்டுவிட்டு ஊடகங்களே நீதிபதிகளாகவும், சாட்சிகளாகவும் தண்டிக்கும் அதிகாரிகளாகவும் இருப்பது ஜனநாயகத்திற்கு கேடு விளைக்கும்.
அரசியல் ஆசாபாசங்களால் உந்தப்பட்டும், பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்துடனும் அவரை நடத்துவதும் துறவிகளையே இழிபடுத்துவதை இந்து சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது
நித்தியானந்தா சுவாமிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களைப்பற்றி ஒளிபரப்பப்பட்ட காட்சிகளைப் பார்க்கும்போது ஒரு சிறு கும்பல் மட்டுமே இதைச் செய்வதும் சாதாரண மனிதன் இதில் ஈடுபடவில்லை என்பதும் தெளிவாகிறது. அவர் பற்றிய அனைத்து விவரங்களையும் அவர் வெளியிடும் வரை காவல்துறையும், அரசும், ஊடகங்களும், மக்களும் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
(உண்மையான இந்துமத பக்தர்களின் கொந்தளிப்பு நித்தியானந்தாவின் சொத்து சேர்ப்பு குறித்தல்ல; முற்றும் துறந்த துறவி சினிமா நடிகையுடன் தனியறையில் உல்லாசமாக இருந்ததே என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுக்கிறோம்.-எடிட்டர்)

எழுதியவர்: வசந்தவாசல் அ.சலீம்பாஷா, March 11, 2010
நிலையாயிற்றே...! அவன் விளக்கம் என்ற பெயரில் ஏதோ புதிதாய் ஒரு கதையைச் சொல்லி பூ சுற்றுவானாம்... அதையும் இந்த பாமர மக்கள் உண்மையென நம்பி மீண்டும் அர்ச்சனை தட்டோடு வலம் வருவார்களாம்..! போதமய்யா போதும் மக்களை ஆன்மீகச் சொற்பொளிவின் பெயரால் முட்டாளாக்கி நீங்களெல்லாம் அதில் பலனடந்த வரை போதும். விடுங்கள் ப்ளீஸ் மக்கள் மனிதர்களாகவே வாழ விடுங்கள். உங்களுக்கு புண்ணியமாகட்டும்..!
எழுதியவர்: muja, March 12, 2010
எழுதியவர்: vivekjayan, March 17, 2010
eriyara neruppula ennai ottra vendam,
media onnum judge agalai,
nadandha nigalvai than pottu kaamichurukakanga,
ozhunga marathadi la nooru perukku naduvula thungi irukkavendiyadhuthane//
edukku a.c, pattu methai, appuram aaraichi panna pombainga,
enna nenaichittirukinga,
makkal pongi endhricha,
ellam tamil nattula irukka mudiyadhu
vakkalathu vangara munchiyai paaru//
எழுதியவர்: செவத்தப்பா, March 18, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|





ஷபாஷ் எடிட்டர் அவர்களே!
இந்த இராம.கோபாலன் கூட அந்த மாதிரியான ஆள் தான். அதனால் தான் இப்படி கிடந்து குதிக்கிறார். அந்த காலத்தில் இப்போது மாதிரியான தொழில் நுட்பம், காமிரா வசதி இல்லாததால் இந்த இராம.கோபாலன் தப்பித்து விட்டார். இவரும் கூத்தடித்த ஆள் தான். துறவிகள் என்று வேஷம் போடும் எல்லோருமே திருடன்கள் தான். இன்னும் மாட்டிக் கொள்ளாதவன் காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறான் அவ்வளவு தான்.