பெ ன்னாகரம்: இடைதேர்தல் நடைபெறும் பென்னாகரம் தொகுதியில் அதிகாரிகள் நடுநிலையாகச் செயல்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்க நிலைக்குழுவை அமைக்க வேண்டு ம் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், பென்னாகரம் தொகுதியை போர்க்களமாக்க ஆளுங்கட்சியினரால் முயற்சி நடக்கிறது. பா.ம.க.வினரை கோபப்படுத்தி அவர்கள்மீது தாக்குதல் நடத்தி, காயப்படுத்தி, பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் பொய்யாக வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து, அவர்களின் தேர்தல் பணியை முடக்கி போடவும் திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
பென்னாகரம் தொகுதியிலுள்ள சோதனை சாவடிகளில் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்வதில்லை. தொகுதிக்குள் சட்டவிரோதமான சமூகவிரோதிகள், வெளியாட்கள் நுழைந்து ஆயுதங்களுடன் படையெடுத்து வருகிறார்கள்.சட்ட விரோதமாக வரும் வாகனங்களை கண்காணித்து சோதனை சாவடிகளில் தடுக்க வேண்டும். ஆளுங்கட்சி வாகனங்கள் சோதனையின்றி சுதந்திரமாக சோதனை சாவடியை கடந்து செல்கின்றன.ஆனால் பா.ம.க. கொடி போட்ட வாகனங்கள் வந்தால் மட்டும் தடுத்து நிறுத்துகிறார்கள். சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் எங்களை காக்க வைக்கிறார்கள்.
இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? அதிகாரிகள் நடுநிலைமையுடன் செயல்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க ஒவ்வொரு தொகுதியிலும் நிலைக்குழுவை தொகுதி அளவிலும், மாவட்ட அளவிலும் அமைக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் வகுத்து கொடுத்திருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டளவிலான நிலைக்குழுவில் கலெக்டர், மூத்த போலீஸ் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்றும் உள்ளது. தொகுதி அளவில் உள்ள நிலைக்குழுவில் தொகுதி தேர்தல் அலுவலர், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தால் பல பிரச்சினைகளுக்கு உள்மட்டத்திலேயே தீர்வு காணமுடியும். தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு பேச வேண்டிய அவசியம் இருக்காது. இனியாவது இத்தகைய நிலைக்குழுக்களை அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி ஆணையிடவேண்டும்.
இந்த தொகுதிக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.ஒருவர் வந்துவிட்டார். இன்னொருவர் வர இருக்கிறார். அவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பா.ம.க. தெரிவித்த புகார்களின் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக மதிக்கிறது. தேர்தலை அமைதியாகவும்,நியாயமாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

எழுதியவர்: வீர வன்னியன் ஆத்தூர், March 13, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|





உங்களது வாகனங்கள் சோதனையிடுவதென்றால பின் எப்படி மூட்டை மூட்டையாக பணம், அரிசி, வேஸ்டி சேலை, சர்ட் பிட்டுகள் வீடுவீடாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பன்னாடைகளா இந்த மொல்லமாத்ரி வேலைகளையெல்லாம் இல்லாமல் ஒருமுறை ஒரேமுறை ஒரு இடைத்தேர்தலை சந்தித்து வென்றுகாட்டுங்கள் பிறகு பார்ப்போம் உங்களது செல்வாக்கு என்னவேன்று!?