இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கடுமையான பூகம்பத்தால் சிலி 10 அடி தூரம் நகர்வு

E-mail அச்செடுக்க

கடந்த மாதம் (பிப்ரவரி) சிலி நாட்டில் மேற்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படு காயம் அடைந்தனர்.பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பிரேசில், போர் டலேசா போன்ற நாடுகளில் குடியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் பூகம்பத்தால் சிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 4 பல் கலைக்கழகங்கள், பல நிறுவனங்கள், புவியியல் வல்லுனர்கள் ஆய்வுகள் மேற் கொண்டனர். இதில், சிலி நாட்டில் உள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளது.

வல்பாறைசோ, மென்டோஷா, அர்ஜென்டினா போன்ற நகரங்களும் வழக்கத்தை விட நகர்ந்துள்ளன.



கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்