புதுடெல்லி: மகளிர் தினத்தை முன்னிட்டு கேரள மாநிலத்தில் இருந்து வெளியாகும் தினசரி பத்திரிக்கை ஒன்று ஆன்- லைனில் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் பெண்மணிகளை கண்டறியும் வகையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இந்த கருத்துக்கணிப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு 53சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் மூலம் மிகச்சிறந்த பெண்மணிகளில் ஒருவராக சோனியாகாந்தி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச குளிர்பான நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சுவதை எதிர்த்து போராடி வரும் கேரளாவை சேர்ந்த மயிலம்மா என்ற பெண் 13 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார்.
அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 9 சதவீத ஆதரவை பெற்றுள்ளார். இரும்பு மங்கை என்றழைக்கப்படும் மணிப்பூரைச் சேர்ந்த சர்மிளாவுக்கு 8.5 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. ஜனாதிபதி பிரதீபா பட்டீல், ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு மக்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. பிரதீபாபட்டீலுக்கு 6 சதவீதமும், நடிகை ஐஸ்வர்யாராய்க்கு 3 சதவீத ஓட்டுக்களும் தான் கிடைத்திருந்தன.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு 2சதவீத பெண்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




