புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் பயங்கர இனகலவரம் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு தீவிரமாக விசாரித்து வருகிறது.
குஜராத்தில் நடைபெற்ற இன கலவரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. ஏசான் ஜாப்ரி என்பவர் கொல்லப்பட்டார். அவரது மனைவி ஜாகியா கொடுத்த புகாரின் பேரில் அவ்வழக்கில் தனி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்காக முதல்-மந்திரி நரேந்திர மோடி வரும் 21-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழு உத்தர விட்டுள்ளது. இது குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளதால் முதல்-மந்திரி நரேந்திர மோடி தார்மீக பொறுப்பு ஏற்று உடனே பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு நரேந்திர மோடி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் சதி திட்டம் உள்ளதாக பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




