இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பள்ளிகளில் ஆணுறை எந்திரம்! பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு

E-mail அச்செடுக்க

ரோம்: இத்தாலி நாட்டவர்கள் திருமணத்துக்கு முன்பே ஆண்களும் பெண்களும் உடலுறவுகளில் ஈடுபடுவது சாதாரணமான விஷயம். பள்ளிக்கூட்த்தில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் இது சகஜமான ஒன்று.  இதனால் பெண்கள் கர்ப்பம் அடைவதும் ஆண் பெண் இருவரும் பால்வினை நோய்களால் பாதிக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயங்கள் ஆகும்.

இதை தடுக்க  கெப்னர் நகரில் உள்ள ஒரு பள்ளி நிர்வாகம் பள்ளி வளாகத்திலேயே ஆணுறை எந்திரங்களை மாட்டி வைத்தது. மாணவர்கள் மற்றும் மாணவிகளின் கழிவறைகளில் இவற்றை வைத்தனர். இவற்றில் காசு போட்டால் ஆணுறை தானாக வெளியே வந்து விழும். இது வெளியில் கிடைப்பதை விட பாதி விலைக்கே விற்கப்பட்டன. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பள்ளிக்கூடத்திலேயே ஆணுறை வைத்து இருப்பது மாணவ- மாணவிகளை பள்ளி வளாகத்திலேயே உறவு வைத்துக்கொள்ள நிர்வாகமே அவர்களை தூண்டுவது போல உள்ளது என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியருடன் அவர்கள் புகர் செய்தபோது அவர் இந்த எந்திரத்தை அகற்ற மறுத்துவிட்டார். அவர் இதுபற்றி கூறும்போது, பெற்றோர் மற்றும் ஆசிரியருடன் கலந்து பேசிதான் இந்த எந்திரத்தை வைத்திருக்கிறோம். மேலும் எங்கள் மாணவர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். எனவே எந்திரத்தை அகற்ற வாய்ப்பில்லை என்று கூறினார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்