இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பென்னாகரம் : காவல்துறைக் கண்காணிப்பாளர் நீக்கம்!

E-mail அச்செடுக்க
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பென்னாகரம் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் காவல்துறை கன்காணிப்பாளர் சுதாகர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய எஸ்.பிக்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பென்னாகரம் தொகுதியில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன.

திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாமக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதேபோல் அதிமுகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் திமுகவினர் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக ஆதாரத்துடன் புகார் கொடுத்தும்,  காவல்துறைக் கன்காணிப்பாளர் சுதாகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக எம்எல்ஏ வேல்முருகன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, பென்னாகரம் தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணி எஸ்.பி.யாக இருந்து சுதாகரை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சுதாகருக்குப் பதிலாக தேனி எஸ்.பி. பாலகிருஷ்ணன், கோவை எஸ்.பி.கண்ணன் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் இருவரும் டிஜஜி மேற்பார்வையில் இயங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: வீர வன்னியன் ஆத்தூர், March 13, 2010
கேட்பதற்க்கு எவரும் இல்லை என்று திமிர்தனத்துடன் நடந்துகொள்கிறார்கள்! ஆளும் கட்சிக்கு அதிகாரம் மற்றும் கொள்ளையடித்த பணம் இருக்கிறதென்று மமதையில் ஆடிகொண்டிருக்கிறார்கள் இதற்க்கு அங்குள்ள தேர்தல் அதிகாரியும் காவல்துறை அதிகார்கள் அவர்களுக்கு குடை பிடிக்கிறார்கள். ஆடுங்கடா அடுங்கா ஆட்சியிருக்கும்வரைதான் ஆடமுடியும்.. எங்களுக்கும் காலம் வரும் அப்பொழுது தெரியும்.

உங்களது வாகனங்கள் சோதனையிடுவதென்றால பின் எப்படி மூட்டை மூட்டையாக பணம், அரிசி, வேஸ்டி சேலை, சர்ட் பிட்டுகள் வீடுவீடாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பன்னாடைகளா இந்த மொல்லமாத்ரி வேலைகளையெல்லாம் இல்லாமல் ஒருமுறை ஒரேமுறை ஒரு இடைத்தேர்தலை சந்தித்து வென்றுகாட்டுங்கள் பிறகு பார்ப்போம் உங்களது செல்வாக்கு என்னவேன்று!?

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்