தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவிலிருந்து தெலுங்கு தேசம் கட்சியை அக்குழு நீக்கியுள்ளது.வெள்ளிக் கிழமை (12-03-2010) அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோதண்டராம் கூறியுள்ளார்.
கூட்டு நடவடிக்கைக் குழு கேட்டுக் கொண்டவாறு தெலுங்குதேச எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகாததை அடுத்து தெலுங்கு தேசம் கட்சி நீக்கப்பட்டதாக கோதண்டராம் கூறினார்.
ஆனால், மகபூப் நகர் மாவட்டத்திற்கு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு வந்தசமயத்தில் தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர்கள் கைது செய்யப்பட்டதும், தெலுங்கானா ஆதரவு வழக்கறிஞர்கள் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் நடத்திய தாக்குதலுமே அக்கட்சியின் நீக்கத்திற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




