இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின், இந்தியா-ரஷ்யா இடையே பல்வேறு துறைகளில் 19 ஒப்பந்தங்களில் நேற்று கையெழுத்திட்டார்.
இந்தியாவில் 12 அணு உலைகளை அமைப்பது, மிக்-29 ரக விமானங்களை வாங்குவது, கோர்ஷ்கோவ் விமானம் தாங்கி கப்பலை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவது உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழகத்தில் திருநெல்வேலி-கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
திருநெல்வேலி-கூடங்குளத்தில் 6 அணு உலைகளும் மேற்கு வங்கம்-ஹரிப்பூரில் 6 அணு உலைகளும் அமைப்பது என்று இந்த சந்திப்பின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கும், ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்துக்கும் இடையே ஒப்பந்தம் மற்றும் உரத்துறை உட்பட மொத்தம் 19 ஒப்பந்தங்களும் ஒரே நாளில் கையெழுத்தாகின.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




