இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஊட்டி: ‌‌‌‌‌திடீர் காட்டுத் ‌தீ - வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்தன

E-mail அச்செடுக்க

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா வனப்பகுதியில் ‌‌‌‌‌திடீரென காட்டுத் ‌தீ பரவியுள்ளதால் அதை அணைக்க வனத்துறையினர் ‌‌தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

 

தொட்டபெட்டாவில் நேற்று ‌பிற்பகலில் ‌திடீரென காட்டுத்‌தீ பரவியதையடுத்து வனத்துறையினர் ‌விரைந்து வந்து ‌தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் காட்டுத்‌தீ வேகமாக பரவி வருவதால் அதனை அணைக்க கடுமையாகப் ‌போராடி வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய வனக்கோட்ட அலுவலர்,மலையோரப் சாலைகளில் வாகனத்தை ‌நிறுத்தி புகைப்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அதிக பட்ச அபராதம் ‌விதிக்கப்படும் என்றும் வனத்திற்கு ‌தீ வைக்கும் சமூக ‌விரோதிகள் பற்றி ரகசிய கண்காணிப்பு நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே தீயின் வெம்மை தாளாமல் காட்டுக்குள்ளிருந்த வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி  அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்