இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

IPL T20 - 2010, புது வகை பேட் அறிமுகம்

E-mail அச்செடுக்க

மாறிவரும் கிரிக்கெட் விளையாட்டின் வசதிகேற்ப, புது வகையான பேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாங்கூஸ் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த புது வகை பேட்,தற்போது இந்தியாவில் நடக்கும் அனைத்து ஐபிஎல் போட்டிகளில் பயன்படுத்தப்படும் என்றும், இதற்கான அங்கீகாரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கிவிட்டதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆட்டக்காரரும், சென்னை சூப்பர் கிங்ஸின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான மாத்யூ  ஹைடன், இந்த பேட்டை தனது ஆட்டத்தில் பயன்படுத்துவார் என்றும், இப்பேட்டின் விளம்பரங்களிலும் தோன்றுவார் என்றும் தெரிகிறது.

பார்ப்பதற்கு சிறுவர்கள் பயன்படுத்து மட்டை போல் இருந்தாலும், அடித்து விளையாடுவதற்கு வசதியாக இருக்கும் என்றும், இதன் உயரம் டெஸ்ட் போட்டி பேட்டை விட சற்று சிறியதாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.


கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்