இலங்கை அரசு மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இல்லை - ஹிலாரி
விடுதலை புலிகளுடன் ஆன போர் முடிவடைந்த நிலையில், இலங்கையில் நாளுக்கு நாள் அரசு மனித உரிமை மதிப்பளிப்பது குறைந்து வருகிறது.
மோதல் பகுதிகளுக்கு வெளியே சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், ஆட்கள் காணமல் போவது போன்ற மனித உரிமை மீறல்களால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுயுள்ளார்.
உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியறவு துறையின் செயலர் ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமைகள் நிலமைகள் நிலவுவதை பொறுத்தே அந்நாட்டுடன் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் தொடர்புகள் இருக்கும் என்று ஹிலாரி கிளிண்டன் நேற்று நியூயார்க்கில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் பழிவாங்குவதை நிறுத்துமாறும், அவர்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்க அரசை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பும், மனித உரிமை கண்காணிப்பகமும் கேட்டுக்கொண்டுள்ளன.
நடந்த முடிந்த அதிபர் தேர்தலிற்குப் பின்னர், ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும் மிரட்டி பணிய வைக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக அம்னெஸ்டி அமைப்பும் குற்றம் சாட்தியுள்ளது.
விடுதலை புலிகளுடன் ஆன போர் முடிவடைந்த நிலையில், இலங்கையில் நாளுக்கு நாள் அரசு மனித உரிமை மதிப்பளிப்பது குறைந்து வருகிறது. மோதல் பகுதிகளுக்கு வெளியே சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், ஆட்கள் காணமல் போவது போன்ற மனித உரிமை மீறல்களால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியறவு துறையின் செயலர் ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமைகள் நிலமைகள் நிலவுவதை பொறுத்தே அந்நாட்டுடன் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் தொடர்புகள் இருக்கும் என்று ஹிலாரி கிளிண்டன் நேற்று நியூயார்க்கில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் பழிவாங்குவதை நிறுத்துமாறும், அவர்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்க அரசை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பும், மனித உரிமை கண்காணிப்பகமும் கேட்டுக்கொண்டுள்ளன.
நடந்த முடிந்த அதிபர் தேர்தலிற்குப் பின்னர், ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும் மிரட்டி பணிய வைக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக அம்னெஸ்டி அமைப்பும் குற்றம் சாட்தியுள்ளது.
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|

அமெரிக்கா மனித உரிமைகளை பற்றி பேசுகிறது.
ஈரக்கிலும் மற்ரும் அமெரிக்கா படையெடுத்த மற்ற நாடுகளிலும் கொல்லப் பட்ட குழந்தைகளை இவர் கண்டதில்லை போலும்.
எந்த நாடும் இதுவரை மற்ற நாடுகள் மீது தானே வலிய படையெடுத்து கொன்று குவிப்பதில்லை, அமெரிக்காவைத் தவிர.
எண்ணை வளத்திற்க் காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் இவர்கள் மனித உரிமை பற்றி பேசுகிறார்கள்.
ஈராக்கில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப் பட்ட பிறகு, அமெரிக்கா சொன்ன சிம்பிளான பதில் உலகறிந்த்தது,
"தவறுதலாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போர் நடந்து விட்டது."
பல்லாயிரம் மக்களின் பிணத்தின் மீது நின்று நிகழ்த்திய இவர்களின் உரை யாருக்கும் கவலை இல்லை. ஏன்?
தண்டிக்க இறைவன் போதுமானவன்.