ரஷ்ய பிரதமர் புடின் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திபில் இரு நாடுகளுக்கும் இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
ரஷிய பிரதமர் புதின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். அவருடன் மந்திரிகள், உயர் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றும் வந்து உள்ளது. விமான நிலையத்தில் புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீலை புதின் சந்தித்து பேசினார். அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை ரஷிய பிரதமர் புதின் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, அணுசக்தி துறையில் ஒத்துழைப்பு, தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது ராணுவம், அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
ரஷியாவின் உதவியுடன் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளை அமைப்பது, மேற்கு வங்காள மாநிலம் ஹரிபூரில் 6 அணு உலைகளை அமைப்பது, ரஷியாவிடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு 29 `மிக்-29 கே' ரக போர் விமானங்களை வாங்குவது, ரஷியாவிடம் இருந்து கோர்ஷ்கோவ் விமானம் தாங்கி போர்க்கப்பலை வாங்குவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்திய கடற்படைக்கு கோர்ஷ்கோவ் விமானம் தாங்கி போர்க்கப்பலை வாங்குவது தொடர்பாக கடந்த 2004-ம் ஆண்டிலேயே இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் பின்னர் அந்த போர்க்கப்பலுக்கு ரஷியா கூடுதல் தொகை கேட்டது. இதைத்தொடர்ந்து திருத்தி அமைக்கப்பட்ட தொகையான ரூ.10 ஆயிரத்து 530 கோடி விலையில் அந்த கப்பலை வாங்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
டெல்லியில் ரஷ்ய பிரதமர் புடின் பிரதமர் மன்மோகன் சிங் சந்திபில் இரு நாடுகளுக்கும் இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|