இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அரசியல்வாதிகள் திருந்த வேண்டுமானால் எல்லோரும் 49ஒ-க்கு வாக்களிக்க வேண்டும்

E-mail அச்செடுக்க

"பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவது ஜனநாயகமில்லை.​ இந்த அரசியல்வாதிகள் திருந்த வேண்டுமானால் நாம் எல்லோரும் 49ஒ-க்கு வாக்களிக்க வேண்டும்" என மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த கல்யாணம் கூறியுள்ளார்.


ஆரணிக்கு அருகிலுள்ள குன்னத்தூர் ஸ்ரீபாரதி மகளிர் கலைக்கல்லூயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் தினவிழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இருக்க இடம்,​​ உணவு,​​ தண்ணீர் இல்லாமல் அவதிப்படுபவர்கள் 60 சதவீதத்தினர் உள்ளனர்.​ சுதந்திரம் வாங்குவதற்கு முன் ஈவ் டீஸிங்,​​ திருட்டு,​​ கொலை,​​ கடத்தல் என்பது இப்போது இருப்பது போல் இல்லை.​


காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அரசியலுக்கு வரவில்லை.​ டாக்டர் ராஜேந்திரபிரசாத்,​​ ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களின் குடும்பத்தில் யார் யார் உள்ளனர் என்று கூடத் தெரியவில்லை.​ ஆனால் நேருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அரசியலில் உள்ளனர்.​ கருணாநிதியின் குடும்பத்தில் பெரும்பாலானோர் அரசியிலில் உள்ளனர்.


பணம் கொடுத்து வாக்குகளை பெறுவது ஜனநாயகம் இல்லை.​ தற்போதுள்ள அரசியல்வாதிகள் திருந்த வேண்டுமென்றால் அனைத்து மக்களும் ஒன்று கூடி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் அல்லது 49ஓவிற்கு வாக்களிக்க வேண்டும்.


குடியரசுத்தலைவர்,​​ பிரதமர்,​​ முதலமைச்சர்,​​ எம்பிக்கள்,​​ எம்எல்ஏக்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.​ இவர்கள் தங்குவதற்கு வீடு,​​ உணவு,​​ பயணச்செலவு எல்லாவற்றையும் அரசு வழங்குகிறது.​ பிறகு ஏன் அதிக சம்பளம் தரவேண்டும்?​ பென்ஷன் தரவேண்டும்?​ குறைவாக சம்பளம் வாங்கும் வாட்ச்மேனுக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுங்கள்.​ நான் அரசு ஊழியராகத்தான் பணிபுரிந்தேன்.​ ஆனால் பென்ஷனை வேண்டாமென்று கூறிவிட்டேன்.​ ​ ​


காவல்துறை பொதுமக்களுக்குத்தான் பாதுகாப்பு தரவேண்டும்.​ அமைச்சர்,​​ எம்எல்ஏக்களுக்கு ஏன் பாதுகாப்பு தரவேண்டும்?​ மகாத்மா காந்தியே "எனக்கு எதற்கு பாதுகாப்பு?'​ எனக் கேட்டு பாதுகாப்புக்கு இருந்த போலீஸôரை அனுப்பிவிட்டார்.


காந்திக்கு உலக மக்கள்தான் சொத்து.​ அவரிடம் ஒரு கண்ணாடி,​​ இரண்டு வேட்டி,​​ கைகடிகாரம்,​​ செருப்பு,​​ படுக்கை இதைத்தவிர வேறு எதுவும் இல்லை.​ சுதந்திரத்துக்குப் பிறகு ஐந்தரை மாதங்கள் காந்தி உயிரோடு இருந்தார்.​ அரசாங்கம் நடைபெற்ற லட்சணத்தைப் பார்த்து இரவு நேரங்களில் அவர் கண்ணீர் வடித்தார்.​ காந்தி சுடப்பட்டு இறந்த போது அவருக்கு அருகில்தான் நான் இருந்தேன்" என்று கல்யாணம் கூறினார்

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்