தமிழக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் சற்றுமுன் திறந்து வைத்தார். விழாவுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாகாந்தி, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகினார். சபாநாயகர் ஆவுடையப்பன், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திரா முதல்வர் ரோசையா, புதுவை முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்
பின்னர் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு சென்றனர். சரியாக 5 மணி 5 நிமிடத்தில் பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார். திறந்து வைத்ததும், பேட்டரி கார் மூலம் முதல்வர் கருணாநிதியும், பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியாவும் இணைந்து அமர்ந்தபடி வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்தனர்.
சபாநாயகர் ஆவடையப்பன் வரவேற்புரையாற்றினார். விழா மேடையில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியாவுக்கு முதல்வர் கருணாநிதி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
5,000த்திற்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம், முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த சட்டசபையில் வரும் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. போர்க்கால அடிப் படையில் கட்டப்பட்டுள்ள இதன் கட்டுமானப் பணிகளை, முதல்வர் தினசரி நேரில் சென்று பார்வையிட்டு வந்தார். நேற்றும் வளாகத்திற்கு சென்ற முதல்வர் கருணாநிதி, திறப்புவிழா நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார். புதிய சட்டசபை போன்றே திறப்பு விழா மேடை அமைக்கப் பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




