ஜப்பானிலுள்ள ஹோன்ஷு தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று(13/03/2010) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 5.8 அலகாக பதிவானது.
நிலநடுக்கத்தால் உயிரிழப்போ சேதமோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. இன்று காலை மேகாலயாவில் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகு பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போன்று இந்தோனேஷியாவின் இதே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சமீபத்தில் சிலியைக் கடுமையான பூகம்பம் தாக்கியுள்ள நிலையில், இன்று காலை ஜப்பான், மேகாலயா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பூகம்பம் மக்களிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




