ஐபிஎல் III கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. திவாரி 33 பந்துகளில் 53 ரன்களும் , ராயுடு 33 பந்துகளில் 55 ரன்களும் விளாசினர்.
பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களே சேர்க்க முடிந்தது. ராஜஸ்தான் ராயல் அணி வீரர் யூசுப் பதான் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதம் அடித்தார். சதம் அடித்த பதான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




