இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றார்

E-mail அச்செடுக்க
பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவி தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கருத்துக்கள் (6)Add Comment
0
...
எழுதியவர்: ஷபி, March 13, 2010
பெரியார்தாசனனை அல்லாஹ்வின் அடிமையாக மாற்றிய வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்
0
...
எழுதியவர்: ismail, March 13, 2010
maasaallaha.alhamdulilla.allahuaqbar
0
...
எழுதியவர்: vetri london, March 14, 2010
what does mean Abdullah
0
...
எழுதியவர்: hasan.a.k, March 14, 2010
periyaar dhasanai iraidhasanai maatriya iraivanukku nandri
0
...
எழுதியவர்: sikka, March 15, 2010
Mr.Vetri abdhullah enral meaning IRAI ADIMAI,slave of almighty GOD[paramaathmaa].
Alhamdhulillah...
0
...
எழுதியவர்: rahim, March 15, 2010
pls ask periyar dhasam to read hadith.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்