இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பிரபாகரனின் தாயார் கனடாவில் செட்டிலாகிறார்

E-mail அச்செடுக்க
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மரணத்தைத் தொடர்ந்து ராணுவ காவலில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் தாயாருமான தாயார் பார்வதி அம்மாள் விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, வெளிநாட்டில் வாழும் அவருடைய மகளிடம் அனுப்ப வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் கனடாவிலுள்ள பிரபாகரனின் சகோதரியிடம் பார்வதி அம்மாள் அனுப்பி வைக்கப்படுகிறார். முதலில், சிங்கப்பூரிலுள்ள உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.சிவாஜி லிங்கம் தெரிவித்தார். அதன் பிறகு, அங்கிருந்து பார்வதி அம்மாளை பிரபாகரனின் சகோதரி கனடா அழைத்துச் செல்வார் என்று தெரிகிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்