இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

உ.பி: பரேலி நகரில் இனக்கலவரம் - கடைகளுக்கு தீவைப்பு

E-mail அச்செடுக்க
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரேலியில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. கலவர நிலைமையை ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று பழைய மார்க்கெட் என்று அழைக்கப்படும் குத்கானா சப்ஜி மண்டி பகுதியில் அமைந்துள்ள 20 கடைகளை விஷமிகள் தீயிட்டு கொளுத்தினர். கலவரக்காரர்களை அடக்க முயன்றபோது காவல்துறை காண்காணிப்பாளர் ஒருவரும், பொதுமக்கள் 20 பேரும் மற்றும் சில போலீஸ்காரர்களும் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 5 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் பரேலியில் பதட்டநிலை நீடிக்கிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்