ஆசியா மற்றும் ஐரோப்பாவிலுள்ள 17 நாடுகளை இணைக்கும் வகையில் அதிவிரைவு புல்லட் ரயில் பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சீன அரசுக்கு சொந்தமான பொறியாளர் வாங் மென்க்ஸு கூறுகையில், ‘‘2025ம் ஆண்டில் ஆசியா, ஐரோப்பிய நாடுகளை அதிவேக புல்லட் ரயில் மூலம் இணைக்க சீனா விரும்புகிறது. இது நடைமுறைக்கு வந்தால் பெய்ஜிங்கில் இருந்து லண்டனுக்கு மணிக்கு 350 மணி வேகத்தில் சென்று சேரலாம்’’ என்றார்.தென்கிழக்கு ஆசிய புல்லட் ரயில் பாதை அமைப்பதிலும் சீனா ஆர்வம் காட்டி வருகிறது. அதன் மூலம் சீன நகரான குன்மிங்கிலிருந்து சிங்கப்பூருக்கு ரயில்பாதை அமைக்கப்படுகிறது. அதேபோல, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லையோர சீன பகுதியான உரும்கியிலிருந்து கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் வழியாக ஜெர்மனிக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.
ரஷ்ய எல்லையோர சீனப் பகுதியில் இருந்து ரஷ்யாவின் ஹெய்லோங்ஜியாங் நகருக்கு புல்லட் ரயில் பாதை அமைத்து, ரஷ்யா வழியாக ஐரோப்பிய நாடுகளையும் இணைக்க அது திட்டமிட்டுள்ளது. அதன்மூலம், சீனாவில் இருந்து 17 நாடுகளுக்கு புல்லட் ரயில் சேவையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
வாங் மேலும் கூறுகையில், ‘‘இதைச் செயல்படுத்துவதில் பல பிரச்னைகள் இருப்பதை சீனா அறியும். செலவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை அந்தந்த நாடுகளுடன் சீனா பேசி வருகிறது’’ என்றார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




