இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இந்தியாவில் தமிழ்நாடு தான் முன்னணி மாநிலம் - பிரதமர்

E-mail அச்செடுக்க

நேற்று புதிய சட்டமன்ற வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையில் "முதல்-அமைச்சர் கருணாநிதியின் தலைமையில், இந்தியாவிலேயே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது" என்று கருணாநிதிக்கும் தமிழகத்திற்கும் புகழாலாரம் சூட்டினார்.

 

மேலும் " ஊரக வளர்ச்சி, நிலப்பட்டா வழங்குவது போன்றவற்றில் புதிய உயரத்தை தமிழகம் எட்டியுள்ளது. சக்தி மிகுந்த ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கு தமிழகம் ஒரு கேந்திரமாக இருக்கிறது. மிக நவீன ஜவுளி ஆலைகள் இங்கு உள்ளன.
நகர்ப்புற வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், தரமான கல்வி வழங்குவதிலும் கண்ணைக்கவரும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மிகுந்த பொறுப்பு மற்றும் திறமை வாய்ந்த மாவட்ட-நகராட்சி நிர்வாகங்களை கொண்ட மாநிலம் என்ற பெருமையும் பாரம்பரியமும் தமிழகத்துக்கு உண்டு. இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம்தான் முன் உதாரணம்.
இதை நான் சொல்வதற்கு, நம் கண் முன்பு எழுந்து நிற்கும் இந்த புதிய கட்டிடம் காரணமாகும். பழைய சட்டசபை 1937-ம் ஆண்டு செயல்பட தொடங்கியது. மிகப்பெரிய பாராளுமன்றவாதிகளை அது உருவாக்கியுள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்திய பெரிய தலைவர்களின் வீடாக அது திகழ்ந்தது. இங்குள்ள எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகத்தினரும்தான் தமிழகத்தின் மேம்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர்கள்.
வேளாண்மை, தொழிற்சாலை, கல்வி ஆகியவற்றில் வளர்த்த மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு, இங்குள்ள தரமான அரசியல் தலைமைகளும், திறமையான நிர்வாக இயந்திரமும்தான் காரணம். தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்ற உள்ளாட்சி அமைப்புகள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகப்பணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தில் நான் பாராட்டுகளை கூறிக்கொள்கிறேன்" என்று கூறினார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்