இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தமிழக சட்டமன்ற திறப்பு விழாவின் உண்மையான சாதனையாளர் யார்?

E-mail அச்செடுக்க

நேற்று நடைபெற்ற புதிய சட்டமன்ற வளாகத்தின் திறப்பு விழாவில் சிறப்பாக செயல்பட்ட சாதனையாளர்கள் யார்?

 

புதிய சட்டமன்ற பல புதிய அம்சங்களை கொண்டு தமிழகத்திற்கு சிறப்பு ஏற்படித்தியுள்ளது என்றால், அதன் பிரமாண்ட திறப்பு விழா எல்லோரையும் மூக்கின் மேல்  விரல் வைக்கும் அளவில் நடைபெற்றது. பெரும் விவிஐபிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி சிறு விபரீதமும் இல்லாமல் நடைபெற பாடுபட்ட பல துறை ஊழியர்களில், போக்குவரத்து சிறுது கூட தொல்லையில்லாமல் சீராக அமைத்த போக்குவரத்து காவல் துறையினர் எல்லா பாராட்டுகளையும் அள்ளிச்சென்று விட்டனர்.

நேற்று சென்னை அண்ணாசாலையில் நேற்று போக்குவரத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் துணை சாலைகளிலும், வேறு சில குறுகிய சாலைகளிலும், விழா நேரத்தில் போக்குவரத்து மாற்றப்பட்டு, வேறு சாலைகள் வழியாக வாகனங்கள் அனுப்பப்பட்டன.

போக்குவரத்து மாற்றங்களால் சென்னை நகரில் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்றப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை தவிர்க்க கூடுதல் போலீஸ் கமிஷனர் எம்.ரவி மற்றும் அதிகாரிகளின் சிறப்பான போக்குவரத்து நிர்வாகத்தால் போலீசார் மிக திறமையாக செயல்பட்டனர். ரவியும் அவ்வப்போது போலீஸ் வயர்லஸ் தொடர்பு மூலம்  போக்குவரத்து நிலைமைகளை அறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.

இதன் காரணமாக, எந்த இடத்திலும் போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை, விழா முடிவடைந்து அடுத்த சில நிமிடங்களில், போக்குவரத்து நிறுத்தப்பட்ட சாலைகளிலும் மிகத்தாராளமாக போக்குவரத்து இருந்தது. எந்த இடத்திலும் தேவைக்கு அதிகமாக ஒருநிமிடம் கூட போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்