இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சகாரா பாலைவனத்திலிருந்து ஐரோப்பாவுக்கு சூரிய சக்தி மின்சாரம்

E-mail அச்செடுக்க

சகாரா பாலைவனத்தில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை நிறுவ, ஜெர்மன் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.இந்தத் திட்டம் மூலம் உலகத்திற்கே மின்சாரம் வினியோகம் செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


சகாரா பாலைவனத்தில் சுமார் 35 லட்சம் சதுர மைல் பரப்பளவில் பாரபோலிக் ட்ரப் எனும் சாதனத்தை பயன் படுத்தி, சூரிய வெப்பத்தை சேகரித்து, அதற்கென இருக்கும் பிரத்யேக தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்க வல்லுனர்கள் திட்டமிட்டுள்ளனர்.

வரும் 2050ஆம் ஆண்டு ஐரோப்பாவின் மின்சாரத் தேவையில் 15 சதவீதத்தை இத்திட்டத்தின் மூலம் செய்யும் நோக்கில், சகாரா பாலைவனத்தில் இருந்து ஐரோப்பாவிற்கு மின்சாரத்தை கொண்டு செல்வதிலுள்ள நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வும் காணப்படும் என்று இத்திட்டம் குறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்