பெண்களின் மீது பாலியல் பலாத்காரம் செய்வதில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில், இராணுவத்தில் பணிபுரியும் பெண் சிப்பாய்கள் மீதும் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
உலகில் பாலியல் பலாத்காரங்கள் மிகவும் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதல் இடத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றது. தற்போது வெளி வரும் அறிக்கைகள் இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரத்திலும் அமெரிக்காவை எவரும் முந்தி விட முடியாது என்று கூறுகின்றது. அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்காவிலிருந்தே வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
கடந்த வருடங்களில் 2009 மட்டும் 37000 பெண் சிப்பாய்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது. எனினும் இந்த எண்ணிக்கை மிகவும் சிறியது என்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிகமான பெண் சிப்பாய்கள் அது பற்றி முறைப்பாடு செய்வது இல்லை என்றும் மீறி முறைப்பாடு செய்தால் அவர்கள் பழிவாங்கப் படுவதாகவும் அதே ஆய்வறிக்கைக் கூறுகிறது.
அமெரிக்க இராணுவத்திலுள்ள பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரத்தில் 25 சதவீதம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள அமெரிக்க இராணுவத்தில் நடை பெறுவதாகவும் பெண்டகன் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
அமெரிக்கா முழுவதும் பாலியல் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை விடவும் கூடுதல் என்று சமீபத்திய மற்றொரு ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பாலியல் தொடர்பான குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
இதற்காக அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் முகவரி உள்ளிட்டவை அடங்கிய சேவையை தனியார் நிறுவனம் ஒன்று வழங்குகிறது. "இதன்மூலம், ஒருவர் தாம் வாழும் பகுதிக்கு அருகில் பாலியல் குற்றங்களைப் புரிவோர் என்று கருதப்படுவோர் யாரேனும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்" என்று அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகின்றது என்பது குறிபிடதக்கது.
முன்னேற்றமடைந்த நாடு எனவும் பெண்களின் சுதந்திரத்திற்கு முன்னுதாரணமான நாடு எனவும் நாகரீகத்தின் உச்சியில் உள்ள நாடு எனவும் மக்களால் தவறாக கருதப்படும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முன்னணியில் இருக்கும் போலிருக்கிறது!

எழுதியவர்: ஷபி, March 15, 2010
எழுதியவர்: sikka, March 15, 2010
இன்றெல்லாம் நடு ரோட்டில் தண்ணியடித்தாலும்,ஒழுக்க் சீர்கேடான விஷயங்களை செய்தாலும் தவரில்லை என்று கருதப்படுகிறது.
ஆனால், தவறுகளைப் பற்றி அரிவுறுத்த யாரேனும் முற்ப்பட்டால் அவர்கள் இன்னல்களுக்கு ஆளாவது சகஜமாகிவிட்டது.
இது போன்ற பாலியல் பலாத்காரம் புரியும் கேவலாமான ராணுவத்தை உலகின் ஒளி விளககை போலவும்,
அதை எதிர்க்கும் யுவான் ரிட்லீ போன்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப் படுவதும் சாதாரணமாகிவிட்டது.
ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கே இந்த நிலமை என்றால், ராணுவத்தால் கைது செய்யப்படும் பெண்கள்?
சொல்ல முடியாத அவலங்கள்.
அந்த பட்டியல் இன்னும் நீளம்.
அவர்களை இறைவன் பாதுகாக்கவேண்டும்.
செய்தியை படித்துவிட்டோம். ஹும்...
வழக்கம் போல் நாம் நமது வேலையை பார்க்க செல்வோம், என்று இருக்கக் கூடாது.
இந்த செய்தியை மக்களிடம் சென்று சேர்க்கும் கடமை படிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
அருள் புரிய இறைவன் போதுமானவன்.
| < முந்தையது | அடுத்தது > |
|---|




