மூன்றாவது ஐ பி எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. கல்லிஸ் மட்டும் நின்று விளையாடி ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மேத்யுஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஹாட்ஜ் மற்றும் திவாரி இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். 4 பந்துகள் மீதமுள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 136 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




