கடந்த ஒருவாரமாக தலைமறைவாகியுள்ள சாமியார் நித்தியானந்தா தனது இணைய தளம் மூலமும் தன்னார்வ அமெரிக்க செய்தியாளர் மூலமும் வீடியோ பேட்டி கொடுத்து தன்பக்க நியாயத்தைச் சொல்லி வருகிறார். இன்னிலையில் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது.சமீபத்தில் வெளியான வீடியோ பற்றியும், அதைத் தொடர்ந்த துரதிரஷ்டவசமான நிகழ்வுகளைப் பற்றியும் உங்கள் முன்பாக சில உண்மைளையும் சில கருத்துக்களையும் மனம் திறந்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.வீடியோ டேப் குறித்து இப்போதுதான் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். தவறான சித்தரிப்புகள் (Missrepresentation) மற்றும் அவதந்திரம் (கான்ஸிபிரஸி) ஆகியவை பாகமாக இருப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
ஆய்வுக்கு முன்பாக எந்தவொரு செய்தியையும், கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. அடிப்படையாக அதைத் தாண்டிய சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இந்த வீடியோ வெளியிடப்பட்டதும் அதுகுறித்த உண்மைகள் பற்றி எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல் சமூக சேவை செய்து வரும் எனது தியான பீட ஆசிரமங்கள், பல இடங்களில் சமூக விரோத கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
சமூக விரோத கும்பல் எதைப் பற்றியும் யோசிக்காமல் சமூக சேவை நிறுவனமான தியானபீடம் மீது நடத்திய தாக்குதல்களால், நானும் எனது பக்தர்களும் அனாதைகளைப் போல உணர்கிறோம். எனது மனசாட்சியின் அடிப்படையில், நான் மெளனத்தை தொடர்ந்து நீட்டிக்கப் போகிறேன். புதிய எதிர்காலத்தை இது உருவாக்கும் என்று நம்புகிறேன். அதுதான் மேலும் சிறப்பான முறையில் சேவையாற்ற உதவும் என கருதுகிறேன். யாரெல்லாம் மக்களை காயப்படுத்தினார்களோ, அவர்களை குணப்படுத்த தியானம் மூலம் நான் முடிவு செய்துள்ளேன்.
பக்தர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம் தியானத்தை தொடருங்கள். தயவு செய்து எனது போதனைகளை, சக்திகளை புரிந்து கொள்ளுங்கள். அவை அனைத்தும் சக்தி வாய்ந்தவை. எப்படி, சிவசூத்திரா, பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்ரா போன்றவை சக்தி வாய்ந்தவையோ,அதுபோல எனது போதனைகளும், தியான முறைகளும் சக்தி வாய்ந்தவை.அதை விடாமல் தொடருங்கள். புத்தொளி பெறுங்கள். நமது அன்பையும், பரிவையும் உலகம் முழுவதும் பரவ விடுவோம் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (4)

எழுதியவர்: murali, March 16, 2010
unn phothanigal sakthi vaaindhavaigal ,but unn leelaigal sagathi vaaindhavatgal
எழுதியவர்: ovais, March 16, 2010
gidhaiyai,pothidhtavan,sithaiyodu.poivittan.unnai ellam.makkal.seruppal,atippatu,tappe.ellata,kantasami.ovais.{nellai]
எழுதியவர்: செவத்தப்பா, March 16, 2010
பொதுமக்களை குறித்து ஸ்வாமி நித்தியானந்தா சொல்லும் "...சமூக விரோத கும்பல் எதைப் பற்றியும் யோசிக்காமல் சமூக சேவை நிறுவனமான தியானபீடம் மீது நடத்திய தாக்குதல்களால், நானும் எனது பக்தர்களும் அனாதைகளைப் போல உணர்கிறோம்..." செய்தியை வாசிக்கையில் ஸ்வாமியை நினைத்து, அழுவதா அல்லது சிரிப்பதா என்று புரியவில்லை!
ஸ்வாமி சொல்ல வருவது, பொதுமக்கள் சமூக விரோத கும்பலென்றால், ஸ்வாமிஜி எந்த வகையென்று வகைப்படுத்துவாரா?
பொதுஜனங்களுக்கு காற்று வருவது இருக்கட்டும், முதலில் உங்கள் வீட்டு ஜன்னல் கதவுகளை(யாவது) திறவுங்கள் ஸ்வாமி; அப்படியாவது நீங்கள் வெளிக்காற்றை சுவாசித்து, சுயநினைவுக்கு வருகிறீர்களா என்று பார்ப்போம்!
ஸ்வாமி சொல்ல வருவது, பொதுமக்கள் சமூக விரோத கும்பலென்றால், ஸ்வாமிஜி எந்த வகையென்று வகைப்படுத்துவாரா?
பொதுஜனங்களுக்கு காற்று வருவது இருக்கட்டும், முதலில் உங்கள் வீட்டு ஜன்னல் கதவுகளை(யாவது) திறவுங்கள் ஸ்வாமி; அப்படியாவது நீங்கள் வெளிக்காற்றை சுவாசித்து, சுயநினைவுக்கு வருகிறீர்களா என்று பார்ப்போம்!
எழுதியவர்: செவத்தப்பா, March 18, 2010
"...எனது போதனைகளை, சக்திகளை புரிந்து கொள்ளுங்கள். அவை அனைத்தும் சக்தி வாய்ந்தவை." இதை யாருக்காக சொல்கிறீர்கள் ஸ்வாமிஜி? பொதுமக்களுக்கு எப்படித் தெரியும் உங்களுடைய சக்திவாய்ந்த விஷயங்கள் எதுவென்று? நீங்கள் ரஞ்சிதாவுக்குச் (செய்த) சொன்ன உபதேசங்களை, உங்களுடைய சீடர்கள்/பக்தர்கள், ஊடகத்துக்கு தவறுதலாக அனுப்பிவிட்டார்கள் போலும்!
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




