இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மார்ச்-22,23 தேதிகளில் பென்னாகரத்தில் ஜெ. பிரச்சாரம்

E-mail அச்செடுக்க
கொடநாட்டில் ஓய்வெடுத்துவரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பென்னாகரம் அதிமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து  இரண்டு நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். பிரசாரத்திற்காக வருகிற 21ம் தேதி சேலம் வருகிறார். அங்கு தங்கும் ஜெயலலிதா 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய இருநாட்கள் பென்னாகரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி வழியாக பென்னாகரம் தொகுதிக்கு ஜெயலலிதா வேனில் சென்று தொப்பையாறு, நாகமலை, பெரும்பாலை,ஏரியூர்,நெருப்பூர் வழியாக பல்வேறு ஊர்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.அன்று மாலை பென்னாகரத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர் டி.ஆர்.அன்பழகனை ஆதரித்து பேசுகிறார். பின்னர் தர்மபுரி வழியாக மீண்டும் சேலம் வந்து தங்குகிறார்.

மறுநாள் தர்மபுரி வழியாக வேனில் வந்து இந்தூரில் பிரசாரத்தை தொடங்குகிறார்.தாளபள்ளம், மாமரத்துப்பள்ளி, மன்னேரி ஆலமரத்துப்பட்டி வழியாக பிரசாரம் செய்து முடித்து விட்டு பாப்பாரப்பட்டியில் நடக்கும் பொதுகூட்டத்தில் பேசுவார் என்று அதிமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்