இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட தின்னூர் கிராமத்திலுள்ள வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பென்னாகரம் டிஸ்பி பஞ்சவர்ணத்துக்கு ரகசிய தகவலைத் தொடர்ந்து டி.எஸ்.பி. பஞ்சவர்ணம், பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், தாசில்தாருமான டியூக் பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த ஒரு பையில் 8 ஆயிரத்து 710 ரூபாய் இருந்ததாம். துருவித்துருவி விசாரணை நடத்தியபோது தின்னூர் காட்டுக்கொள்ளை பகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை அவர்கள் எடுத்துச் சென்றதாக அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் தாசில்தாரும், போலீசாரும் பென்னாகரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். இவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள ராமலேரிமுத்து கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் (30). தின்னூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (30) மற்றும் தேவராஜ் (30) என்பதும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சோதனையிட்டதில் மூவரும் பா.ம.க.வை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு,விசாரணைக்குப் பின்னர் மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




