திருச்சி பாலக்கரை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக ஆறு பேருடன் வந்த ஒரு காரை சோதனை செய்த போது அவர்கள் முன்னுக்கு பின்னாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் ,மேலும் விசாரணை நடத்திய போது, அதில், திருச்சி மதன்குமார், ஜோதி ராஜா, தஞ்சை தட்சிணாமூர்த்தி, மணிகண்டன், அரவிந்தன், கார் டிரைவர் தினகர் என்பதும் அவர்கள் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி முட்டை ரவியின் கூட்டாளிகள் என்றும் தெரிய வந்தது.இவர்கள் அனைவரும் கொடைக்கானல் தொழிலதிபர் மணிவேல் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், திண்டுக்கலைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சினிமா உள்ளார். திண்டுக்கலைச் சேர்ந்த வினோத் என்பவர் இயக்கும், "பாரதிபுரம்' என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிவர் திண்டுக்கலைச் சேர்ந்த மணிகண்டன். இவர் ஏற்கனவே வக்கீல் சுதாகர் கொலை வழக்கில் தொடர்புடையர்.
இந்த சதித்திட்டத்தில் மூளையாகச் செயல்பட்ட மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ரவுடி குணா அவனையும் தஞ்சையை சேர்ந்த பெரிய தட்சிணா என்பவனையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




