தமிழக காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரப்பனின் கூட்டாளி ஒருவரை 16 ஆண்டுகால தேடுதலுக்குப் பின் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் திங்கள் கிழமை (15-03-2010) அன்று கூறியுள்ளனர்.வீரப்பனின் கூட்டாளியான சேகர் என்பவரை காவல்துறையினர் 1994ஆம் ஆண்டு முதல் தேடி வந்தனர். ஞாயிற்றுக் கிழமையன்று ஈரோடு அருகே உள்ள கடத்தூர் அருகே காவல் துறையினர் கைது செய்தனர்.
மாவட்ட காவல்துறைக் கன்காணிப்பாளர் பிறப்பித்த பிணையில் வெளிவர முடியாத கைதாணையின் படி கைது செய்யப்பட்ட அவர், விரைவு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




